பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
கோபி: கோபி அருகே, நஞ்சகவுண்டம்பாளையத்தில் இருந்து, கொண்டத்து காளியம்மன், மலர் பல்லக்கில், பாரியூர் புறப்பாடு, நடந்தது. கோபி அருகே, பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த டிச.,27ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான, பூமிதி திருவிழா கடந்த, 10ல் நடந்தது. தொடர்ந்து, தொப்போற்சவம், மஞ்சள் நீர் உற்சவம், மின்விளக்கு அலங்காரத்தில், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடந்தன.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் (ஜன., 20ல்) இரவு, பிரமாண்ட மலர் பல்லக்கில், குதிரை வாகனத்தில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அம்மன் புறப்பாடு நடந்தது. பாரியூர் அம்மன் மற்றும் சூலவேலுடன் விநாயகர் சுவாமி, அலங்கரிக்கப்பட்ட மலர் பல்லக்கில், நஞ்சகவுண்டம்பாளையத்தில் இருந்து, பாரியூர் புறப்பாடு நேற்று முன்தினம் (ஜன., 20ல்) இரவு நடந்தது.
வழிநெடுகிலும் பக்தர்கள், தேங்காய் உடைத்து, மலர் பல்லக்கில் பவனி வந்த, அம்மனை தரிசித்தனர்.