பதிவு செய்த நாள்
28
ஜன
2019
11:01
திருப்பூர்:காங்கயம் சிவன்மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சுப்ரமணியசுவாமி எழுந்தருளினார்.திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது.
இக்கோவில் தைப்பூசத் தேரோட்டம் கடந்த, 21ம் தேதி துவங்கியது. மலையை சுற்றி வந்ததேர், மூன்றாவது நாள் நிலையை அடைந்தது. நேற்று முன்தினம் மலை அடிவாரத்தில் உள்ள நந்தவன தோட்டத்தில் தெப்ப உற்சவம்நடந்தது.விழாவின் தொடர்ச்சியாக நேற்று மதியம், மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், மகா தரிசன அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், சுப்ரமணியசுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 30ம் தேதி மஞ்சள் நீராட்டு, தொடர்ந்து சுவாமி, திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது. அன்று மாலை, அபிஷேகம், கொடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் நிறைவு பெறுகிறது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.