குமாரபாளையத்தில், சபரிமலையின் புனிதம் காக்க இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2019 12:01
குமாரபாளையம்: குமாரபாளையம், இந்து முன்னணி சார்பில், சபரிமலையின் புனிதம் காக்க உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும், பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு பாதிப்பு வராமல் காத்திடவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில நிர்வாக குழு உறுப் பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் சிறப்பாளராக பங்கேற்றார். நிர்வாகிகள் முருகேசன், ஸ்ரீதர், ரமேஷ், தர்மராஜ், அன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.