பதிவு செய்த நாள்
28
ஜன
2019
12:01
ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, கபிலர்மலை அடுத்த சிறுகிணத்துப்பாளையம் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜன., 27ல்) நடந்தது. நேற்று முன்தினம் (ஜன., 26ல்) காலை, 6:00 மணிக்கு மேல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை நடந்தது. 10:00 மணிக்கு மேல், பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங் களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
மாலை 6:00 மணிக்கு கணபதி வழிபாடு, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, முதற்கால யாகபூஜை நிறைவு நடந்தது. நேற்று (ஜன., 27ல்) காலை, 6:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. 7:00 மணிக்கு மேல் பகவதியம்மன், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.