உடுமலை பஞ்சலிங்க அருவியில் உற்சாகம் விடுமுறை நாளில் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2019 02:01
உடுமலை: விடுமுறை நாளையொட்டி, பஞ்சலிங்க அருவிக்கு, சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகளவு இருந்தது. உடுமலை, திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், சுற்றுலாப்பயணிகள் திருமூர்த்திமலைக்கு சுற்றுலாவாக வருகின்றனர். நேற்று முன்தினம் (ஜன., 26ல்) குடியரசு தினத்தையொட்டி, இரண்டு நாட்கள் நேற்று (ஜன., 27ல்) தொடர் விடுமுறையானதால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
தைப்பூசத்தையொட்டி, பழநி சென்று திரும்பிய பக்தர்கள், திருமூர்த்திமலைக்கு வந்து அமண லிங்கேஸ்வரரை தரிசித்தனர். பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீராக இருப்பதால், அருவியில் நீராடவும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டினர்.