பதிவு செய்த நாள்
02
பிப்
2019
03:02
திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார சிவன் கோவில்கள் அனைத்திலும், இந்தாண்டின் முதல் சனி பிரதோஷ விழா, இன்று (பிப்., 2ல்) நடைபெறுகிறது.
சிவன் கோவில்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டிற்கான முதல் சனி பிரதோஷம் இன்று (பிப்., 2ல்) நடக்கிறது. மேலும், மாத சிவராத்திரியும் இணைந்து வருவது மிகவும் சிறப்பு.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மகா பிரதோஷத்தை முன்னிட்டு, திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில், இன்று (பிப்., 2ல்) மாலை பிரதோஷ வழிபாடு நடக்கிறது.திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ - விஷ்ணு கோவிலில் புஷ்பவனேஸ்வரர் சன்னிதியில் இன்று (பிப்., 2ல்) மாலை நந்திக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஊத்துக்கோட்டை சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், இன்று (பிப்., 2ல்) மாலை பிரதோஷ விழா நடைபெற உள்ளது.
மாலை, 4:30 மணிக்கு சிவபெருமான், நந்திக்கு பால், தயிர், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும்.
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து சிவன் கோவில்களிலும், நடப்பாண்டு, சனி பிரதோஷம் நடைபெற உள்ளது. இதற்கு அடுத்த சனி பிரதோஷம், நவம்பர், 9ம் தேதி நடக்கவிருக்கிறது.