பதிவு செய்த நாள்
02
பிப்
2019
03:02
ஆர்.கே.பேட்டை: வண்டார்குழலி அம்மன் உடனுறை ஆத்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபி ஷேகம், வரும், 10ம் தேதி காலை நடைபெற உள்ளது.
இதற்கான யாகசாலை பூஜை, 9ம் தேதி துவங்குகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூர் சின்ன குளக்கரையில் அமைந்துள்ளது, வண்டார்குழலி அம்மன் உடனுறை ஆத்மலிங்கேஸ் வரர் கோவில்.
பல ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்த கோவிலை, ஓராண்டாக, பக்தர்கள் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பணிகள் முழுமை பெற்றுள்ள நிலையில், வரும், 10ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.இதற்கான யாகசாலை பூஜை, 9ம் தேதி காலை, கணபதி பூஜையுடன் துவங்குகிறது.
மாலை, 3:00 மணிக்கு, பரிவார தெய்வங்களின் சிலைகளின் கரிக்கோல ஊர்வலம் நடக்கிறது.மறுநாள் காலை, 10:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடு ஆகின்றன. 10:20 மணிக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
இரவு, 7:00 மணிக்கு, சிவ பூத கண வாத்தியங்கள் முழங்க, சுவாமி வீதியுலா எழுந்தருளு கிறார்.இந்த கோவில் நந்தி தேவரின் சிலையை, திருப்பி வைத்து வழிபட்டால், கர்ப்பிணி களுக்கு சுக பிரசவம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால், நந்தி தேவர் சிலை. நிரந்தரமாக பிரதிஷ்டை செய்யப்படாமல் இருப்பது சிறப்பு.