பதிவு செய்த நாள்
04
பிப்
2019
11:02
காரியாபட்டி:காரியாபட்டி வி.நாங்கூரில் வேலாயுதமூர்த்தி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து சாந்தியுடன்கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கின. வேதாபாராயணம், யாகசாலை பூஜை, தீபாராதனை, திருமறை ஆசீர்வாதம், பிரசாதம் வழங்குதல் நடந்தது. புஷ்பகலா தேவியர் சமேத வேலாயுத மூர்த்தி அய்யனார், காலபைரவர், சடையாண்டி, குதிரை வாகனம் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பொது மக்கள் செய்திருந்தனர்.