சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2019 11:02
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை அமாவாசை வழிபாடு நேற்று சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி தரிசனம் செய்தனர்.அமாவாசையையொட்டி பிப்., 2 முதல் பக்தர்கள் சதுரகிரி மலைகோயிலுக்கு செல்ல அனுமதிக்கபட்டனர். இரு நாட்களில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். அமாவாசையான நேற்று பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவியத்துவங்கினர். காலை 6:00 மணி முதல் வனத்துறையினரின் சோதனைக்கு பிறகு மலையேற அனுமதிக்கபட்டனர்.அதிகாலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி கோயில்களில் மூலவர்களுக்கு 18 வகையான காப்பு அபிேஷகங்கள் நடந்தன. பின்னர் ராஜஅலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.மதுரை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட்டன. டி.எஸ்.பி.,ராஜா தலைமையில் 200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் மாலை 4:00 மணிக்குமேல் பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.