பதிவு செய்த நாள்
05
பிப்
2019
12:02
காஞ்சிபுரம்: தை மாத, சோமவார அமாவாசையான நேற்று, காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், நாக சிலைக்கு பூஜை செய்து, அரச மரத்தை சுற்றி வந்தனர். சோமவார அமாவாசை மிகவும் விசேஷ நாளாக கருதப்படுகிறது. திங்கட்கிழமையில் வரும் அமாவாசையன்று, நாக சிலைக்கு பூஜை செய்து, அரச மரத்தை, சுற்றி வந்தால் கன்னி பெண்களுக்கு திருமணம் கைக் கூடும் என்பது நம்பிக்கை. தை மாத சோம வார அமாவாசையான நேற்று, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், அரச மரத்தடியில் உள்ள நாக சிலைகளுக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூஜை செய்தனர்.