பதிவு செய்த நாள்
05
பிப்
2019
03:02
வால்பாறை: வால்பாறை நகர் மாரியம்மன் கோவில் விழா, திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில், 35ம் ஆண்டு திருவிழா நேற்று (பிப்., 4ல்) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 10:30 மணிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துஅலுவலர் பாபுலட்சுமணன் கொடியேற்றினார்.
விழாவில், வரும், 9ம் தேதி காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம், பக்தர் களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. வரும், 10ம் தேதி காலை, 12:00 மணிக்கு கருப்புசுவாமிக்கு கெடா வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
அன்று, மாலை, 6:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து சிங்க வாகனத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவுக்கா, ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெள்ளைசாமி, செயலாளர் அர்ச்சுனன், பொருளாளர் சரவணன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.