பதிவு செய்த நாள்
05
பிப்
2019
03:02
சத்துவாச்சாரி: கோவில் திருவிழா நடத்த அனுமதி கேட்டு மனு கொடுக்க, மண்டியிட்டு கிராம மக்கள், கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர் கூட்டம், நேற்று (பிப்., 4ல்) நடந்தது. டி.ஆர்.ஓ., பார்த்திபன், மக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது, குடியாத்தம் அடுத்த, கே.ஏ., மோட்டூரைச் சேர்ந்த மக்கள், மண்டியிட்டபடி வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனு விபரம், எங்கள் ஊரில், கங்கையம்மன் கோவில் திருவிழாவை பரம்பரை, பரம் பரையாக நடத்தி வந்தோம். கடந்தாண்டு முதல், இரு பிரிவினர் தனித்தனியாக திருவிழா நடத்தினர். இதில், பிரச்னை ஏற்பட்டதால், இந்தாண்டு விழா நடத்த போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். மக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையை சுமூகமாக தீர்க்க வேண்டும். கோவில் விழாவை, ஒரே விழாவாக நடத்த, அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.