கம்மாபுரம்: தை மாத அமாவாசையை முன்னிட்டு, கம்மாபுரம் அங்காள பரமேஸ்வரி கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.நேற்று (பிப்., 4ல்)காலை 8:00 மணியளவில் அம்மனுக்கு பால், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் உட்பட 108 அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில், ஊஞ்சல் உற்சவத்தில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமானோர் வழிபாடு செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.