சிதம்பரம் சிவகாமசுந்தரியம்மன் கோவிலில் 11ம் தேதி மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2019 01:02
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தின் அருகில் உள்ள சிவகாமசுந்தரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 11 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் நடக்கிறது.
சிதம்பரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் சிவகங்கை குளத்தின் அருகில் சிவகாமசுந்தரிக்கு தனி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை தொடர்ந்து, கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது.நடராஜர் தெற்கு கோபுரம் அருகில் உள்ள முக்குருணி விநாயகர் கோவிலில் நேற்று காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.இதனையடுத்து கும்பாபிஷேகத்திற்காக முதலாம் கால யாக பூஜைகள் நாளை 7ம் தேதி துவங்கி அனுக்ஞை, வாஸ்துசாந்தி, பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேகம் வரை எட்டுகால யாக பூஜைகள் நடைபெற உள்ள நிலையில், சிவகங்கை குளத்தருகில் பிரம்மாண்டமான யாக சாலை மண்டப பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.அதே போல மேற்கு கோபுரம் அருகில் உள்ள வள்ளி தேவசேனா முத்துக்குமாரசாமி கோவில் கும்பாபிஷேகம் 11ம் தேதி காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் நடைபெற உள்ளது.அதற்கான யாகசாலை மண்டபம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்தது வருகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொதுச் தீட்சதர்கள் செய்து வருகின்றனர்.