Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கோபுர சிலையில் ... ராமேஸ்வரம் கோயிலில் ரஷ்ய பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலில் ரஷ்ய பக்தர்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடந்தை மகாமகம் குளத்தில் பிப்.19ல் மாசிமக தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
குடந்தை மகாமகம் குளத்தில் பிப்.19ல் மாசிமக தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

07 பிப்
2019
11:02

தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில், வரும்,19ல் மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், மக நட்சத்திரத்தன்று, மாசிமக விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இவ்விழா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக, கொண்டாடப்படுகிறது.ஆண்டு தோறும், மாசிமக விழாவில் சிவாலயங்கள், வைணவத் தலங்களில் கொடியேற்றி, 10 நாள் உற்சவம் நடை பெறும்.இதையடுத்து மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர்கோவில், காளகஸ்தீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர்கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், வரும்,10ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.வரும் 19ம் தேதி மகாமக குளத்தில், பகல், 12:00 மணி முதல், 1:00 மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும், சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமிகோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில், 11ல், 10 நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 19ம் தேதி காலை, 7:00 மணிக்கு சக்கரபாணி கோவிலில் தேரோட்டம் நடக்கிறது.

பின், 12 மணிக்கு காவிரி ஆற்றில், சக்கரப் படித்துறையில் வைணவக் கோவில்கள் சார்பில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.மோட்டார் மூலம் தண்ணீர்:இந்தாண்டு மகாமக குளத்திலும், பொற்றாமரைக்குளத்திலும் பக்தர்கள் நீராடுவதற்கு போதியளவு தண்ணீர் தேங்கியுள்ளது.ஆனால், காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை. கடந்த ஆண்டை போல், காவிரியில் மின்மோட்டார் மூலம் நீராட வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar