பதிவு செய்த நாள்
07
பிப்
2019
01:02
திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, சேரன் தொழிலாளர் காலனி, ஸ்ரீகுபேர விநாயகர், குபேர லட்சுமி, பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா, 10ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக விழா, யாகசாலை பூஜைகள், இன்று மங்கள இசை, விக்னஷே்வர பூஜையுடன் துவங்குகிறது. கணபதி ேஹாமம், முதல்கால பூஜையை தொடர்ந்து, மாலையில், வாஸ்துபூஜை, கிராம சாந்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தினமும், காலை, மாலையில், யாகசாலை பூஜைகள் நடக்க உள்ளன. வரும், 9ம் தேதி மாலை, ஐந்தாம்கால பூஜை, கன்யாபூைஜ, சுமங்கலி பூஜை, சுவாசினிபூஜை, வடுகபூஜைகள் நடக்கின்றன. வரும், 10ம் தேதி ஆறாம்கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, காலை, 8:30 முதல், 10:00 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.