பதிவு செய்த நாள்
07
பிப்
2019
01:02
மறைமலைநகர்: மறைமலைநகர் அடுத்த, கடம்பூர் கிராமத்தில், பாலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. 1,200 ஆண்டுகளுக்கு முன், அகத்தியர் வழிபட்டுள்ள பெருமை பெற்றது.இந்த கோவிலை, 2014ம் ஆண்டு, இந்து சமய அறநிலையத் துறை எடுத்துக்கொண்டது. கோவிலை புதிதாக கட்ட, 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.கடந்த, 2015ம் ஆண்டு, திருப்பணியை, காவல் துறை தலைவர், ராஜேந்திரன் மற்றும் ஓய்வுபெற்ற துணை கண்காணிப்பாளர், சம்பந்தம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.தற்போது, அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. இக்கோவிலில், 6ம் தேதி, கும்பாபிஷேக விழா துவங்குகிறது. 10ம் தேதி காலை, 8:30 - 10:00 மணி வரை, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.இதில், சிவ தாமோதரன் தலைமையில், திருவாசகம் விண்ணப்பம் நடைபெறும்.