பதிவு செய்த நாள்
07
பிப்
2019
01:02
காரைக்கால்: சனீஸ்வரபகவான் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உதவுவது குறித்து சீனியர் எஸ்.பி., மகஷே்குமார் பன்வால் தலைமையில் என்.எஸ்.எஸ்.,மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரபகவான் கோவில் கும்பாபிஷேகம், வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட போலீசார் நேற்று டணால் தங்கவேல் கலையரங்கில் ஆலோசனை நடத்தினர். பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அதையடுத்து, பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து, சீனியர் எஸ்.பி., மகஷே்குமார் பன்வால் தலைமையில், என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதுஎஸ்.பி.,க்கள் மாரிமுத்து, வீரவல்லபன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, தொழிலாளர் துறை அதிகாரி செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பக்தர்களுக்கு மருத்துவ உதவி அளித்தல், தீ விபத்து சமயத்தில் பொதுமக்களை பாதுகாத்தல், கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டல், உடமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப் பட்டது.இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், பாலமுருகன், சப்.இன்ஸ்பெக்டர் பிரவீன், சுரஷே் மற்றும் 200க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர்.