Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வசதியில்லாதவர்கள் எளிமையாக ராகு ... சொத்து வழக்கு சாதகமாக!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2012
05:02

உன்னைவிட அனைத்து வழிகளிலும் உயர்ந்தவர்களுக்கு யோசனையோ, அறிவுரையோ வழங்குவதைத் தவிர்த்து விடு. அவ்வாறு செய்தால், அகங்காரக்காரர்கள் வரிசையில் சேர்ந்து விடுவாய். வாழ நினைப்பவன் எப்படியும் வாழலாம். அதற்கு பல வழிகள் உள்ளன. வாழும் முறையை அறிந்து கொண்டு, அதன்படி நடந்தால், நல்ல பல சிறப்புகளை அடைய முடியும்.

உலக நடைமுறைக்கு எதிராக நடக்க நினைப்பது அவ்வளவு எளிதல்ல. மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால், உலக மனப்போக்கின் ஆளுமைக்குத் தனிப்பட்ட முறையில் நாம் தலை வணங்கியே ஆக வேண்டும்.

நம்முடைய இறைவன் நமது அருகிலேயே உள்ளான், அவனைக் காண்பதற்காக நாம் பனைமரம்ஏறத் தேவையில்லை. நல்லவற்றைத் தேர்வு செய்து, முழுவலிமையையும் ஒன்று திரட்டி மகிழ்ச்சியோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மனிதன் செய்யக்கூடிய செயல்களால் இறைவன் ஒரு போதும் மனம் நொந்து போவதில்லை. இதனை சிறு குழந்தை கூட மனதளவில் அறிந்து உள்ளது.

மனிதனுடைய சிந்தனைகள் நல்லதாக இருக்க இறையருள் மிகவும் முக்கியம். இறைவன் பெரிய அரசாங்கங்களை வெறுத்து ஒதுக்குகிறான். ஆனால், சின்னஞ் சிறிய மலர்களை அவன் வெறுப்பதில்லை.

கர்வத்தினால் ஒரு மனிதன் கற்களின் அடியில் புதைந்து போய்விடுகிறான். ஆனால், அன்பினாலும், பிறரிடம் பணிவாக நடந்து கொள்வதினாலும் மேன்மை அடைகிறான்.

பணிகளினால் நமக்கு இடையூறு ஏற்படுமானால், அதை எதிர்த்துப் போராடும் நிலை வரும். இதனால் நமது மனம் திடத்தன்மை அடையும்.

பக்தி உள்ளவர்கள் தம்மால் எட்டக்கூடியதை முயற்சி மூலம்எட்டுகின்றனர். ஆனால், சாதாரண மனம் கொண்ட மனிதர்களோ எட்ட முடியாததை எளிதில் எட்டிவிடத் துடிக்கின்றனர். முயற்சியின்றி இது எப்படி சாத்தியம்?

அன்பினால் நமக்கு முழுமையான மதிப்பு கிடைக்கிறது. அப்படி கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் வரையில் நிச்சயமாக காத்துக்
கொண்டிருக்க வேண்டும்.

நல்லது செய்ய விரும்புகிறவன், பிறரது வாயிற்கதவுகளை தட்ட வேண்டியிருக்கும். ஆனால், அன்பு செலுத்துபவனின் வீடுகளில் வாயில் கதவு திறந்தே  இருக்கும்.

ஒருவருக்கு தாய்மொழிப்பற்று அவசியம் தேவை. ஆனால், பிறமொழிகள் மீது வெறுப்பாக அமைதல் கூடாது. மற்ற மொழிகளிலும் உள்ள உயரிய இலக்கியங்களையும் போற்றி மதித்து வர வேண்டும்.

இலக்கியம், கலை, இசை முதலியன மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டிருந்தாலும், அவற்றின் சிறப்பம்சங்களை ஒவ்வொருவரும் அறிந்து போற்ற வேண்டும்.

சொல்லால் விளக்க முடியாத ஒன்றை சிற்பத்தாலும், ஒவியத்தாலும் முழுமையாக சித்தரிக்க முடியும். சித்திரங்கள் நம்மோடு பேசக்கூடியவை. நம் சிந்தையைத் தூண்டக்கூடியவை.

இறைவன் நமக்கு அருளிய இயற்கையை முழுமையாக உணர்ந்தாலே போதும். இறைவனை நாம் உணரலாம்.

-ரவீந்திரநாத் தாகூர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar