பதிவு செய்த நாள்
11
பிப்
2019
01:02
திருப்பதி: ஆந்திர தலைநகர் அமராவதியில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக, நேற்று (பிப்., 10ல்) பூமி பூஜை நடத்தப்பட்டது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தலைநகர் அமராவதியில், ஏழுமலையான் கோவில் கட்ட, திருப்பதி, திருமலை தேவஸ்தானம் முடிவு செய்தது.
இதற்காக, ஆந்திர மாநில அரசு, 25 ஏக்கர் நிலத்தை இலவசமாக தேவஸ்தானத்திற்கு அளித்தது. அதில், 150 கோடி ரூபாயில், ஏழுமலையான் கோவில் கட்ட, தேவஸ்தான நிர்வாகம், திட்ட அறிக்கை தயார் செய்தது. இந்நிலையில், கோவில் கட்டவுள்ள நிலத்தில், தேவஸ்தான அர்ச்சகர்கள், நேற்று (பிப்., 10ல்), பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டினர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இரண்டாண்டுகளில் இங்கு கோவில் கட்டப்பட்டு, பக்தர்களின் வழிப்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.