பதிவு செய்த நாள்
11
பிப்
2019
04:02
கிருஷ்ணகிரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதி களில் உள்ள கோவில்களில் நடந்த கும்பாபிஷேகவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி காந்திசாலையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று (பிப்., 10ல்) காலை நடந்தது. இதையொட்டி, கடந்த, 8ல் காலை சர்வ தேவதா அனுக்ஞை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, கங்கா பூஜை, அங்குரார்பணம், கலாகர்சணம் ஆகிய பூஜைகள் நடந்தன.
கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று (பிப்., 10ல்) காலை, நான்காம் கால யாக பூஜையுடன், 9:00 மணிக்கு, கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 300க்கும் மேற்பட்ட
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ஜகத்குரு சங்கர மடத்தில், விஜயகணபதி, ஆதிசங்கரர், விஜய மாருதி நவகிரஹ மூர்த்திகளுக்கு, கும்பாபிஷேக விழா, நேற்று (பிப்., 10ல்) நடந்தது. காலை, 12:30 மணிக்கு, கர்நாடகா மாநிலம், களக்காடு கோவிந்தானந்தா சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார்.
* போச்சம்பள்ளி அடுத்த, அகரத்தில் காளியம்மன், திரவுபதியம்மன் கோவிலில், நேற்று (பிப்., 10ல்) மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி, திரவுபதியம்மன், காளியம்மன், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக, தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து, நேற்று (பிப்., 10ல்) சுவாமிக்கு சிறப்பு ஹோமங்கள், யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
* தர்மபுரி கோட்டை வர மகாலட்சுமி சமேத பரவாசுதேவ ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம், நேற்று (பிப்., 10ல்) நடந்தது. நேற்று (பிப்., 10ல்) காலை, 4:30 மணிக்கு சுப்ரபாதம், பிரபந்த பாராயணம், வேத பாராயணம், கோ பூஜை நடந்தது. 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 10:30 மணிக்கு மேல், வேதசாற்று முறை, தீர்த்தப் பிரசாதம் வினியோகம், சர்வ தரிசனம், ஹதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருகல்யாணம் மஹோத்வம், வேத
ஆசிர்வாதம் நடந்தது.
* மொரப்பூர் அடுத்த, எம்.வெளாம்பட்டியில், பெரியநல்லியம்மன், சின்னநல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 8ல், அம்மனுக்கு கொடியேற்றுதல், கங்கனம் கட்டுதலுடன் துவங்கியது.
நேற்று (பிப்., 10ல்) காலை, 4:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, கணபதி ஹோமம், தொடர்ந்து, நல்லியம்மனுக்கு நாடி சந்தனம், உபசார பூஜை, யாகசாலை கலசங்களுக்கு தீபாராதனையும் நடந்தது.
காலை, 10:00 மணிக்கு, பெரியநல்லியம்மன், சின்னநல்லியம்மன் கோபுர கலசத்துக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.