பரமத்தி வேலூர் அருகே, ராஜாசுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2019 04:02
ப.வேலூர்: பரமத்தி வேலூர் அருகே, நன்செய் இடையாறில் உள்ள ராஜாசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று( பிப்., 10ல்) நடந்தது.
நேற்று ( பிப்., 10ல்) காலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை நடந்தது. 9:00 மணிக்கு மூலஸ்தான மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, அலங்காரம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் டாக்டர் பழனிவேலன், அறங்காவலர்கள் மாரப்பன், மோகன், தங்கவேல் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.