பதிவு செய்த நாள்
11
பிப்
2019
05:02
மாமல்லபுரம்:கடலூர், கெங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம், விமரிசையாக நடந்தது.கூவத்தூர் அடுத்த, கடலூர், சின்னகுப்பம் மீனவ பகுதியில், பழமையான கெங்கையம்மன் கோவில் அமைந்து, இப்பகுதியினர் வழிபட்டனர்.
கடற்கரை பகுதியில் உள்ள இக்கோவிலுக்கு மாற்றாக, வசிப்பிட பகுதி மேற்கில், புதிய கோவில் அமைக்கப்பட்டது.கெங்கையம்மன், வினாயகர், முருகர் சிலைகளுடன் மூலவர் சன்னிதி, அலங்கார மகா மண்டபம், நவக்கிர தனி சன்னிதி என இக்கோவில் அமைந்துள்ளது. நேற்று (பிப்., 10ல்) , கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது.கடந்த 8ல், மகாகணபதி, லட்சுமி ஹோமங்கள், முதல்கால யாகபூஜை என துவக்கி, நேற்று (பிப்., 10ல்) காலை மூன்றாம்கால
யாகபூஜை முடித்து, 10.25 மணிக்கு, விமானம், பரிவார மூர்த்திகளுக்கு, புனித நீரூற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, தீபராதனை நடந்து, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். இரவு, அம்மன் வீதியுலா சென்றார். கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது.