தீர்த்த குளத்தின் மேற்கில் அமைந்துள்ள, துணை கோவிலாக, பிரபராம்பிகை சமேத தீர்த்தகரை ஈஸ்வரர் கோவில் உள்ளது.உபயதாரர்கள் மற்றும் அறநிலையத் துறையினர் மூலம் இக்கோவிலை சீரமைத்து, நேற்று (பிப்., 10ல்), காலை, 9:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, 8ம் தேதி, கணபதி ஹோமம் நவக்கிரக பூஜை, கோபூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன.