ஊட்டி புனித கன்னிமரியா ஆலயத்தின் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2019 03:02
ஊட்டி:ஊட்டி இந்துநகரில் உள்ள, புனித கன்னிமரியா ஆலயத்தின் ஆண்டு விழா கொடியேற்றத் துடன் துவங்கியது .செயின்ட் ஜோசப் மேல் நிலை பள்ளியின், தலைமை ஆசிரியர் பெலவேந் திரம் ,சிறப்பு திருப்பலி நிறைவேற்றி விழா கொடியை ஏற்றிவைத்து, ஆண்டு விழாவை துவக்கி வைத்தார்.திங்கள் முதல் தினமும் மாலை ஆறு மணிக்கு சிறப்பு ஜெபமாலை திருப்பலி ,மறையுரை மற்றும் வேண்டுதல் நடக்கும். வரும், ஞாயிற்று கிழமை காலை, 10:00 மணிக்கு மறைமாவட்ட முதன்மை கிறிஸ்டோபர் லாரன்ஸ் ,தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.அதற்கு பின் தேர்பவனி நடக்கும். அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு தந்தை கிங்ஸ்டன் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.