பதிவு செய்த நாள்
12
பிப்
2019
03:02
சேலம்: சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்திய சுவாமி கோவிலில் நேற்று (பிப்., 11ல்) நடந்த குருபூஜை, அன்னமளிப்பு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்திய சுவாமி கோவிலில், 19ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு நேற்று (பிப்., 11ல்) காலை திருவிளக்கு வழிபாடு, விநாயகர், திருமகள் வழிபாடுகளை தொடர்ந்து, சற்குரு அப்பா பைத்திய சுவாமிகளுக்கு வேள்வி, பேரொளி வழிபாடு நடந்தது. ஞான விநாயகர், முருகர், சற்குரு அப்பா பைத்திய சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.