திருவெண்ணெய்நல்லூர் :திருவெண்ணெய்நல்லூர் அடுத்த துலங்கம்பட்டு அங்காளம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இக்கோவிலில் கடந்த 20ம் தேதி காலை கொடியேற்றத்துடன் மகோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், 26ம் தேதி இரவு சக்தி கரக ஊர்வலமும் நடந்தது. நேற்று அதிகாலை 1 மணிக்கு மயானக்கொள்ளையும், மதியம் 1.25 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. தேரோட்டத்தை எம்.எல்.ஏ., குமரகுரு வடம் பிடித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தம்மாள், ஊராட்சி தலைவர்கள் சந்திரா, குமார், ஆறுமுகம், தொகுதி செயலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.