பதிவு செய்த நாள்
14
பிப்
2019
01:02
திருவள்ளூர்: நவ கிரகங்களில் சாயா கிரகங்களான ராகு - கேது பெயர்ச்சியை ஒட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. கடகத்தில் இருக்கும் ராகு, மிதுனத்திற்கும்; மகரத்தில் இருக்கும் கேது, தனுசுவிற்கும், நேற்று மதியம், 2:02 மணிக்கு பெயர்ச்சியானது.
இதையொட்டி, திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், பெரியகுப்பம் அருணாசலேஸ்வரர் கோவில், பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோவில், மணவாள நகர் மங்களீஸ்வரர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும், ராகு - கேதுவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள், நவக்கிரக வழிபாட்டில் பங்கேற்றனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மகா கால பைரவர் கோவிலில், ராகு - கேது பெயர்ச்சி விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, பரிகார பூஜை செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட கோவில்களிலும் ராகு - கேது பெயர்ச்சி பூஜை நடந்தது.