பதிவு செய்த நாள்
14
பிப்
2019
02:02
அனுப்பர்பாளையம்:திருமுருகநாதசுவாமி கோவில், தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில், சுந்தரமூர்த்தி நாயனரால், தேவாரம் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் தேர்த்திருவிழா நேற்று (பிப்., 13ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.காலை, கொடி மரத்தின் முன், விநாயக பெருமான், திருமுருகநாத சுவாமி, ஸ்ரீ சண்முகநாதர், சண்டிகேஸ்வரர் உட்பட பஞ்சமூர்த்திகள், எழுந்தருளினர். சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகளை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவிழாவில், வரும், 19ம் தேதி அதிகாலை திருமுருகநாதர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 20ம் தேதி மாலை 3:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
தேர்த்திருவிழாவையொட்டி, தினமும் மாலை கருத்தரங்கம், இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, தக்கார் லோகநாதன் செய்துள்ளனர்.