பதிவு செய்த நாள்
14
பிப்
2019
02:02
திருப்பூர்:ராகு, கேது பெயர்ச்சி முன்னிட்டு திருப்பூர் பகுதி கோவில்களில் நேற்று (பிப்., 13ல்) சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.
கடக ராசியில் சஞ்சரித்த ராகு பகவான் மிதுன ராசிக்கும், மகர ராசியில் இருந்த கேது பகவான் தனுசு ராசிக்கும் நேற்று (பிப்., 13ல்) இடப்பெயர்ச்சி பெற்றனர். இதையொட்டி திருப்பூர் பகுதியில் உள்ள நவக்கிரக சன்னதி அமைந்து கோவில்களிலும், ராகு மற்றும் கேது தனி சன்னதி அமைந்த கோவில்களிலும் நேற்று சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
அவ்வகையில், திருப்பூர், பல்லடம் ரோடு, சோளாபுரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ராகு கேது சன்னதி; லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில் ராகு கேது சன்னதி; விஸ்வேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருக நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று (பிப்., 13ல்) ராகு கேது பெயர்ச்சி விழா சிறப்பு பூஜைகள் நடந்தன.
யாக சாலை பூஜையில், முன்னதாக விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், வதிக அர்ச்சனை, 27 நட்சத்திர ஹோமம், 1008 மூல மந்திர ேஹாமம், மகா பூர்ணாகுதி, அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியன நடந்தன. இவற்றில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.அவிநாசி, சேவூர் ரோட்டிலுள்ள, ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலிலும், ராகு கேது பெயர்ச்சிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. மிதுனம் மற்றம் மகர ராசியினர், பரிகார பூஜை செய்து கொண்டனர்.