சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2019 02:02
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று (பிப்., 13ல்) ராகு,கேது பெயர்ச்சி விழா நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவி லில் நேற்று (பிப்., 13ல்) ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு நவக்கிரகத்திற்கு முன்பு ஹோம வேள்விகள் துவங்கியது.மதியம் 1:00 மணிக்கு ஹோமத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து ராகு, கேதுவிற்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.