பெரியப்பட்டு ஆலோடி சாப் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2019 02:02
புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ஆலோடி சாப் தர்காவில் உருஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு தர்காவில் ஆலோடி சாப் தர்காவில் உருஸ் என்னும் சந்தனக்கூடு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது.சிறப்பு விழாவான சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் (பிப்., 12ல்) நடந்தது. அதனையொட்டி அன்று இரவுசிறப்பு தொழுகையும், உருஸ் என்னும் சந்தனம் பூசும் சந்தனக்கூடு விழாவும் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.