கிள்ளை: கிள்ளையில் மாசிமகத் திருவிழா வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளதை தொடர்ந்து அனைத்து அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கிள்ளையில் ஆண்டு தோறும் மாசிமகத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி முழுக்குத்துறை தீர்த்தவாரியில் நீராடி, அன்று இரவு கிள்ளையில் தங்கி,பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.பின்னத்தூர் பெருமாள், வளையமாதேவி கோவிந்தராஜா, சிதம்பரம் , புவனகிரி தாலுகா சுற்றுப் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டசுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு தீர்த்தவாரிக்கு வந்து செல்வதால் கூட்டம் அதிகரித்து காணப்படும்.கிள்ளைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்டை வசதிகளை கிள்ளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயலர் அலுவலர் மயில்வாகனன்தலைமையிலான விழா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.