பதிவு செய்த நாள்
15
பிப்
2019
01:02
கன்னிவாடி:கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்வசர் பிரகார வலம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திருவாசக பாராயணத்துடன், மகா தீபாராதனை நடந்தது. காரமடை ராமலிங்கசுவாமி கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.