பதிவு செய்த நாள்
15
பிப்
2019
01:02
அவிநாசி:அவிநாசியிலுள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா, தேரோட்டம், ஏப்., 17ல் நடக்கிறது.சுந்தரமூர்த்தி நாயனாரால்,
தேவாரம் பாடல் பெற்று, கொங்குநாட்டு சிவாலயங்களில் புகழ்பெற்றதும், தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் கொண்டதுமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை
தேர்த்திருவிழா, ஏப்., 10ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்குகிறது.
விழாவில், அன்றைய தினம் காலை, 10:00 மணிக்கு, கொடியேற்றமும், திருமுருகநாதர் வருகை, இரவும் நடக்கிறது. 11ம் தேதி சூரிய, சந்திர மண்டல காட்சி; 12ல் பூதவாகனம், அன்ன
வாகனம், அதிகாரநந்தி, கிளி வாகன காட்சி; 13ல், கைலாச வாகன காட்சி; புஷ்ப பல்லக்கு காட்சி நடக்கிறது.தமிழ் வருடப்பிறப்பான, ஏப்., 14ல் பஞ்சமூர்த்திகள் புறுப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் காட்சி, 15ல், கற்பகவிருட்சம், திருக்கல்யாண
உற்சவம், யானை வாகன காட்சி; 16ம் தேதி சுவாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.வரும், ஏப்., 17 ல் பகலில் பெரிய தேரோட்ட நிகழ்ச்சியும், 18 ம் தேதி அம்மன் தேரோட்ட நிகழ்ச்சியும், மாலையில் வண்டித்தாரை, இரவு பரிவேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது.
அடுத்து, 19ம் தேதி மாலை தெப்பத்தேர், 20ம் தேதி நடராஜர் தரிசனம், 21ல் மஞ்சள் நீர் விழாவும், இரவில் மயில்வாகன காட்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, அறநிலையத்துறையினர் விரைவில் துவக்க உள்ளனர்.