விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சுவாமி நாக வாகனத்தில் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2019 01:02
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகப் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று (பிப்., 14ல்) விருத்தகிரீஸ்வரர் நாக வாகனத்தில் வீதியுலா வந்தார்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவிலில் மாசிமகப் பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சண்முகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுடன் வீதியுலா நடக்கிறது.நான்காம் நாளான நேற்று (பிப்., 14ல்)விருத்தகிரீஸ்வரர் நாக வாகனத்திலும், முருகர் கிடா வாகனத்திலும், விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறப்பு வாகனத்திலும் வீயுலா வந்து பக்தர்களுக்கு அளுள்பாலித்தனர்.