பதிவு செய்த நாள்
16
பிப்
2019
02:02
நாமக்கல்: நாமக்கல் அடுத்த, ராமாபுரம்புதூரில் சக்கரத்தாழ்வார், லட்சுமி மற்றும் ஹயக்கிரீவர் கோவில்கள் உள்ளன. இங்கு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், தொழில் அபிவிருத்திக்காகவும், இன்று (பிப்., 16ல்) காலை, 8:00 மணிக்கு ஹயக்கிரீவருக்கு ஏகதின லட்சார்ச்சனை துவங்கி, இரவு, 8:30 மணிவரை நடக்கிறது. பேனா மற்றும் பென்சிலால் மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். நாளை (பிப்., 17ல்) காலை, 8:30 மணி முதல், ஹயக்கிரீவர் யாகம் நடக்கும். தொடர்ந்து, 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்து பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். பெயர், நட்சத்திரத்துடன் முன்பதிவு செய்பவர்களுக்கு பேனா, பென்சில் பிரசாதமாக வழங்கப்படும். விபரங்களுக்கு, 04286 - 222077, 94433 69077, 63807 89158 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.