பதிவு செய்த நாள்
16
பிப்
2019
02:02
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி தேரோட்டம், வரும், 19ல் நடக்கிறது. நாமகிரிப்பேட்டையில், ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது.
இங்கு, மாசி மாதத்தில் சுவாமிக்கு திருக்கல்யாணம், தேர்த் திருவிழா நடக்கும். இந்தாண்டு விழா, தேருக்கு முகூர்த்தக் கால் நட்டவுடன் தொடங்கியது. நாளை (பிப்., 17ல்), யாகசாலை ஆரம்பமாகிறது. 18 ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றமும், 10 மணிக்கு வேதங்கள் முழங்க ருக்மணி, சத்யபாமா வேணுகோபால் சுவாமிகளுக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. 19 மாலை, 3.00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. எம்.பி., சுந்தரம், எம்.எல்.ஏ., சந்திர சேகரன், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். 20ல், சத்தாபரணத்துடன் விழா முடிகிறது.