பதிவு செய்த நாள்
16
பிப்
2019
02:02
நாமகிரிப்பேட்டை: நாரைக்கிணறு, வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை (பிப்., 17ல்) நடக்கிறது.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், நாரைக்கிணறு ஊராட்சியில் செல்வகணபதி, மாரியம்மன், செல்லியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவில் புனரமைக்கும் பணி, கடந்த சில ஆண்டுகளாக நடந்தது.
இந்நிலையில், விழாக்குழுவினர் கும்பாபிஷேக விழாவை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்று (பிப்., 16ல்), யாகசாலை பிரவேசம், அர்ச்சனை ஹோமம், பூர்ணாஹூதி, கோபுரத்திற்கு தானியம் கொட்டுதல், கோபுர கலசம் வைத்தல்; நாளை (பிப்., 17ல்) அதிகாலை, 5:00 மணிக்கு வேதபாராயணம், செல்வ கணபதி ஹோமம், மூர்த்தி ஹோமம், நாடிசந்தானம் ஆகியவை நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.