விழுப்புரம்: வளவனூர் மேற்கு அக்ரஹாரத்தில் பிரம்ம குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் நாளை 17 ம் தேதி இலவச சிறப்பு தியான முகாம் நடக்கிறது.முகாமில், வாழும் கலை மன அழுத்தத்தில் இருந்து விடுதலை, தற்கொலையில் இருந்து விடுபடுதல். நேர்மறையான எண்ணங்கள், பரமாத்மா பற்றி தெளிவான விளக்கங்கள், உலக நாடக ரகசியம் பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் பங்கேற்போருக்கு, பல பிறவிகளின் கர்ம வினைகள் விலகுவதோடு, செல்வம், ஆரோக்கியம், குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படும். பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பிரம்மச்சாரிகள் மூலம் கற்றுத்தரப்படுகிறது. முகாம் நாளை 17ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலசவமாகும்.