பதிவு செய்த நாள்
18
பிப்
2019
05:02
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பாரம்பரிய, கடல் கன்னியம்மனை வழிபட, பழங்குடியின இருளர்கள் குவிந்தனர்.மாமல்லபுரம், வைணவ வழிபாடு, கலைச்சிற்ப சுற்றுலா என, விளங்குவது
ஒருபுறமிருக்க, பழங்குடி இருளர்களின், பாரம்பரிய கன்னியம்மன் வழிபாட்டு இடமாகவும் புகழ்பெற்றது. பழங்குடி இன மக்களான இருளர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர், வேலூர், ஆந்திர, கர்நாடக பகுதிகளில் வசிக்கின்றனர்.
பாம்பு பிடித்தல், விஷமுறிவு மருந்து தயாரித்தல், விறகு சேகரித்தல், அவர்களின் பரம்பரை தொழில். செங்கல் சூளை, அரிசி ஆலை என, கூலி வேலையும் செய்கின்றனர்.
இவர்களின் குலதெய்வம் கன்னியம்மன், வங்க கடலில் வீற்றிருப்பதாக, வழிபாட்டு நம்பிக்கை.மாசி மக நாளில், மாமல்லபுரம் கடற்கரையில் கூடி, கன்னியம்மனை வழிபட்டு,
திருமணம், காதணி என, நடத்துவர். மாசிமக நாளான நாளை 19 ல்,வழிபட, குடும்பத்தினர், உறவினர்களுடன், தற்போது குவிந்துள்ளனர். கடற்கரை மணல்வெளியில், சேலையை தடுப்பாக கொண்ட, சிறிய திடல் அமைத்து, சில நாட்கள் தங்குவர்.