பதிவு செய்த நாள்
18
பிப்
2019
05:02
திருப்போரூர்:கொளத்தூரில் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில் நாளை (பிப்., 19ல்), மாசி தெப்பம் விழா நடைபெறுகிறது.திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த
கொளத்தூரில் பிரசித்தி பெற்ற, கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மகத்தன்று, இங்கு தெப்பம் விழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டு தெப்பம் விழா, நாளை (பிப்., 19ல்), மாலை, 7:00 மணிக்கு துவங்குகிறது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், கல்யாண ரங்கநாதர் பூதேவி, ஸ்ரீ தேவி தாயாருடன், ஒன்பது
முறை வலம் வருவார்.அதேபோல், கந்தசுவாமி கோவிலின் பிரம்மோற்சவத்தின், 10ம் நாள் விழாவாக தெப்ப திருவிழா, நாளை (பிப்., 19ல்),மாலை, 7:00 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக மாலை, 3:00 மணிக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.