செய்துங்கநல்லூர்:கருங்குளம் சிவன் கோயிலில் ஜெ.,பிறந்தநாள் சிறப்பு பூஜை நடந்தது.கருங்குளம் ஒன்றிய அதிமுக., செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் கருங்குளம் சிவன் கோயிலில் ஜெ.,யின் 64வது பிறந்தநாள் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் நடந்த சிறப்பு பூஜையில் 11 வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் யூனியன் கவுன்சிலர்கள் உடையார், பாமா (எ) பேச்சியம்மாள், சிவகுருநாதன், சகிலாபானு பஷீர் அகமது, இளைஞர் அணி செயலாளர்கள் ஜெயகுமார், வல்லநாடு குருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.