பதிவு செய்த நாள்
29
பிப்
2012
11:02
ஊட்டி : ஊட்டி கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி மகா மங்கள சண்டிஹோமம் துவங்குகிறது. ஊட்டி பிங்கர்போஸ்ட் சுவாமி விவேகானந்த புரம் பகுதியில், பழமை வாய்ந்த மருத்துவ கடவுள் கேம்ப் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் 26வது "ஸம்வத்சார அபிஷேக விழா மற்றும் மகா மங்கள சண்டி ஹோமம் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கிறது. இதில்,"விவசாய விதைகளுக்கு பாரம்பரிய பூஜை,தேவி கலச ஸ்தாபனம், மதுவர்க பூஜை, சப்தசதி புஸ்தக பூஜை, சப்த சதி பாராயணம், வடுக பைரவ பூஜை, பைரவபலி, யோகினி பலி, பஞ்ச கவ்ய பூஜை, கலச ஆவாகனம், வேதிகா அர்ச்சனை, மங்கள மகா சண்டிஹோமம், சவுபாக்கிய திரவிய சமர்ப்பணம், மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, ஆகியவை நடக்கின்றன. 7ம் தேதி பவுர்ணமி பூஜை, முத்துமாரியம்மனுக்கு பொங்கல் சிறப்பு வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மானஸ் குழுவினர், பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.