சேலம்: சேலம் ஐந்து ரோடு, சாஸ்தா நகர் பகுதியில் உள்ள ஐயப்பா ஆஸ்ரமத்துக்கு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், வக்கீல் ராஜபிரியா, புதிய டிரஸ்டியாக நியமிக்கப்பட்டு, அதற்கான ஆணையை தலைவர் நடராஜன் நேற்று (மார்ச்., 3ல்)வழங்கினார். ஐயப்பா ஆஸ்ரமத்தின் முதல் பெண் டிரஸ்டியாக பதவியேற்ற ராஜபிரியாவுக்கு, நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.