படுநெல்லி: அகத்தியர் குருபூஜை விழா, படுநெல்லி கிராமத்தில், நேற்று (மார்ச்., 4ல்) நடந்தது. வாலாஜாபாத் அடுத்த படுநெல்லி நெல்லீஸ்வரரர் என, அழைக்கப்படும் சந்திரமவுலீஸ்வரர் கோவில் வளாகத்தில், அகத்தியர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு, ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி தினத்தில் குரு பூஜை விழா நடக்கும். நடப்பாண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு, நேற்று (மார்ச்., 4ல்) காலை, 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.