பதிவு செய்த நாள்
05
மார்
2019
03:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருக்காலிமேட்டில் சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில் உள்ளது. இங்கு, சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று 4 ல்,காலை, மூலவருக்கும், பிரமராம்பிகை அம்பாளுக் கும் சிறப்பு அபிஷேக அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடந்தது.தொடர்ந்து, உற்சவர் பிரமராம்பிகை அம்பாளுடன், சத்யநாதசுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருக்காலிமேடு, சின்ன காஞ்சிபுரம் பகுதிகளுக்கு வீதியுலா சென்றார். பக்தர்கள், தீபாராதனை காட்டி வழிபட்டனர்.