பதிவு செய்த நாள்
07
மார்
2019
02:03
பல்லடம்: பல்லடம் ஸ்ரீஅங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன், குண்டம் இறங்கி வழிபட்டனர்.கோவிலில், 44வது குண்டம் திருவிழா, நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு, அக்னி குண்டம் வளர்த்தல், அம்மை அழைத்தல் உள்ளிட்டவை நடந்தன.
தொடர்ந்து, இரவு, 8.00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இரவு அக்னி குண்டம் வளர்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை, 7.00 மணிக்கு, பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள், சிறுவர்கள், மற்றும் தாய்மார்கள் குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில், அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மடவிளாகம்காங்கயம், மடவிளாகத்தில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில், 94ம் ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடந்தது. விழா 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் தேதி மயான பூஜை செய்யப்பட்டு, சிவராத்திரி பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, பூக்குண்டம் இறங்கம் நிகழ்ச்சி நடந்தது. 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, சுவாமி வழிபட்டனர்.அவிநாசிஅவிநாசி, காந்திபுரத்திலுள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவிலில், குண்டம் திருவிழா நடந்து. இதையொட்டி, அம்மனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. நேர்ந்து கொண்ட பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர். தொடர்ந்து, சிங்க வாகனத்தில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.