பதிவு செய்த நாள்
07
மார்
2019
03:03
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவால யத்தில், தவகாலத்தை முன்னிட்டு, நடந்த சிறப்பு திருப்பலியில், கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர் நீத்த காலத்தை, உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட நாள், புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த, மூன்றாம் நாள், ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
தவக்காலத்தின் முதல் நாளான நேற்று (மார்ச்., 6ல்), நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், தேவாலய அதிபர் பிரபாகரன் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்களின் நெற்றியில், பாதிரியார்கள் சாம்பல் திலகமிட்டு, தவக்காலத்தை துவக்கி வைத்தனர்.