பதிவு செய்த நாள்
07
மார்
2019
03:03
தஞ்சாவூர்: தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில், தேசிய அளவில் விருதுகள் பெற்ற ஓவியர்கள், சிற்ப கலைஞர்களின் படைப்புகளை உருவாக்க, சிறப்பு முகாம் துவங்கியது.
மகாத்மா காந்தியின், 150வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் நேற்று, ஓவியர்கள், சிற்ப கலைஞர்களின் படைப்புகளை உருவாக்கும், சிறப்பு முகாம் துவங்கியது. மையத்தின் இயக்குனர், பாலசுப்பிரமணியன், தலைமை வகித்து பேசியதாவது:தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில், 6ம் தேதி முதல், 12ம் தேதி வரை, தேசிய அளவில் விருதுகள் பெற்ற, 42 ஓவியர்கள், சிற்ப கலைஞர்களின் படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. தொடர்ந்து, 13ம் தேதி முதல், 19ம் தேதி வரை, இந்த படைப்புகளின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோல்கட்டா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.